உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாயமாகும் இரவு நேர கடைசி டிரிப் டவுன் பஸ்கள்; வெளியூர் சென்று உள்ளூர் திரும்ப முடியாது தவிப்பு

மாயமாகும் இரவு நேர கடைசி டிரிப் டவுன் பஸ்கள்; வெளியூர் சென்று உள்ளூர் திரும்ப முடியாது தவிப்பு

நாட்டில் அனைவருமே சொந்த வாகனங்களில் பயணிக்க தடை இல்லை என்றாலும் எல்லாருக்கும் வசதி வாய்ப்புகள் இருப்பதில்லை. அதோடு அதிக எண்ணிக்கையில் தனிநபர் பயன்பாடு வாகனங்கள் இருந்தால் காற்று மாசுப்படுதல் பிரச்னையும் அதிகரிக்கும். இதனால் பொது போக்குவரத்து வாகனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என மக்களுக்கு அரசுகள் வலியுறுத்துகின்றன. இதற்காக 24 மணி நேரமும் நகரங்களை இணைக்கும் வகையில் விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் வகையில் செயல்படும் டவுன் பஸ் சேவைகள் அதிகாலை துவங்கி இரவு 11:00 மணி வரை இயக்க அரசு, தனியார் டவுன் பஸ் நிர்வாகங்கள் பயண நேர அட்டவனை தயாரித்து வட்டார போக்குவரத்து துறையில் அனுமதி பெறுகின்றனர். காலமுறையில் இதற்காக அரசுக்கு வரியும் செலுத்துகின்றனர். டவுன் பஸ் சேவைகளை பயணிகள் கூட்டம் இருக்கும் பகல் நேரங்களில் தடையின்றி இயக்கப்படுகின்றன. பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும் இரவு நேர கடைசி டிரிப்பை மாவட்டத்தில் பெரும்பாலான வழித்தடங்களில் அரசு, தனியார் பஸ்கள் இயக்குவதில்லை. இதனால் வெளியூர் சென்று விரைவு பஸ்கள் மூலம் வந்திறங்கும் பயணிகள் அதிக செலவில் ஆட்டோ, கார் எடுத்து ஊருக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த வசதியும் சில வழித்தடங்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளர்களால் ஆட்டோ, கார் வாடகைக்கு எடுக்க பொருளாதார வசதியும் இல்லை. இதனால் ரோடுகளில் இரவு நேரங்களில் குறுக்கிடும் விஷ பூச்சிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல கி.மீ., துாரம் நடந்து செல்லும் பரிதாபம் உள்ளது. இதை கருதி இரவு கடைசி டிரிப்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Bhaskaran
ஜூன் 03, 2025 11:35

ஆட்டோ அதிகாரிகள் பேருந்து ஊழியர்கள் கூட்டணி கஷ்டம் மக்கள் மீது


தமிழன்
ஜூன் 01, 2025 21:35

விடியல் ஆட்சியில் பகல் நேரத்தில் கூட அரசு பேருந்துகள் ஒழுங்காக இயக்கப்படுவதில்லை குறிப்பாக கிராமப்புறங்களில் அரசு டவுன் பஸ்கள் பாதிக்கும் குறைவாகவே இயங்கி வருகிறது


Shiva Mouni
மே 28, 2025 21:10

ஆம் உண்மைதான் பயணிகளிடம் நடத்துநர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி இரவு கடைசி டிரிப் தடை செய்யப்படுவது எனக்கும் நடைபெற்றது


அப்பாவி
மே 28, 2025 09:44

ராத்திரில வெளியூர் போகாதீங்க. நடு ராத்திரில பஸ் டயர் கழண்டு ஓடிச்சுன்னா?


புதிய வீடியோ