வழக்கறிஞர்கள் புறக்கணிப்பு
திண்டுக்கல்: பழநி வழக்கறிஞர் தனுஷ்பாலாஜி மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் இன்று ,நாளை (அக்.25) என 2 நாட்கள், திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்வதாக வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன், செயலாளர் செல்வராஜ் கூட்டாக அறிவித்துள்ளனர்.