வாசகர்கள் கருத்துகள் ( 2 )
உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் உண்மையான பெயரில் கருத்து தெரிவிக்கவும். இந்த திமுக ஆட்சி விரைவில் அழியும்.
சோறு...சோறு...சோறு. அதுவும் இலவச சோறு. சோறு போடறவங்களே கழிப்பிட வசதியும் கட்டித்தர வேண்டும்.
பழநி முருகன் கோயிலில் பிப்.11ல் தைப்பூசத்திருவிழா நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இந்த நேரங்களில் வெளி மாவட்டம், மாநிலங்களில் உள்ள பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பாதயாத்திரையாக பழநிக்கு வருகின்றனர். இதற்காக கோயில் தரப்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் செம்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார் சத்திரம், ஒட்டன்சத்திரம், விருப்பாச்சி, தாராபுரம், வடமதுரை, அய்யலுார் உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் வருகின்றனர். அப்படி வரும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள், ஹிந்து அமைப்பினர் இலவசமாக அன்னதானம் வழங்குகின்றனர். களைப்பில் வரும் பக்தர்கள் சாப்பிட்டு ஓய்வெடுக்கின்றனர். இது இவர்களுக்கு பெரும் உதவியாக உள்ளது. தற்போது திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்றால் எங்களிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவித்துள்ளனர். இதனால் ஏராளமான ஹிந்து அமைப்பினர், தன்னார்வலர்கள் ,ஆண்டாண்டு அன்னதானம் வழங்குபவர்கள் அதை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்னையால் பல கிலோ மீட்டர் துாரம் நடந்து வரும் பக்தர்கள் முன்பு அன்னதானம் வழங்கிய இடங்களுக்கு வரும் போது அன்னதானம் வழங்குவோர் இல்லாது கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். வரும் வழியில் உணவகங்கள் இல்லை.இருந்தாலும் தரமற்ற உணவே விற்பனை செய்யப்படுகிறது .உடல் உபாதைக்கு பயந்து அங்கு சாப்பிடாது பக்தர்கள் தரும் உணவுகளை வாங்கி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அன்னதான உணவுகளை விற்பனை செய்தால் அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். காலம் காலமாக நடந்து வரும் மரபுகளை அதிகாரிகள் மாற்றுவது வேதனைக்குரிய செயலாக உள்ளது என தன்னார்வலர்கள் கொதிப்பில் உள்ளனர். பக்தர்கள் நிலை கருதி மாவட்ட நிர்வாகம்தான் இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.
உங்களுக்கு தைரியம் இருந்தால், உங்கள் உண்மையான பெயரில் கருத்து தெரிவிக்கவும். இந்த திமுக ஆட்சி விரைவில் அழியும்.
சோறு...சோறு...சோறு. அதுவும் இலவச சோறு. சோறு போடறவங்களே கழிப்பிட வசதியும் கட்டித்தர வேண்டும்.