உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேலியில் சிக்கி பலியான சிறுத்தை

வேலியில் சிக்கி பலியான சிறுத்தை

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை இறந்தது.மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் இறந்த சிறுத்தையை மீட்டு விசாரித்தனர். திருச்சியில் இருந்து வந்த டாக்டர் சிவச்சந்திரன் குழுவினர் , உடல் பரிசோதனை செய்தனர். வனத்துறையினர் கூறியதாவது: அய்யம்பாளையம் காப்புக்காடு பகுதியில் இருந்து 200மீ., தொலைவில் உள்ள லெனின் சொந்தமான தேக்கு தோட்டத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டு இருந்தது. இரையை விரட்டிக்கொண்டு வந்த சிறுத்தை கம்பி வேலியில் மோதி இறந்துள்ளது. சிறுத்தையின் உடல் வனத்துறை, வருவாய்த்துறை, தன்னார்வலர்கள் முன்னிலையில் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னரே சிறுத்தை இறப்பு தொடர்பான முழு விவரமும் தெரியவரும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ