முதியவருக்கு ஆயுள்
திண்டுக்கல்: செம்பட்டி அடுத்த பிரவான்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 63. 2022 ல் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சத்ய தாரா தீர்ப்பளித்தார்.