உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கலெக்டர் ஆய்வு

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: கலெக்டர் ஆய்வு

திண்டுக்கல்: உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கலெக்டர் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்றுதிண்டுக்கல் மேற்கு ரத வீதி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சாப்பிட்டு கலெக்டர் ஆய்வு செய்தார்.திண்டுக்கல் நேருஜி நினைவு நகரவை மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களிடம் கற்றல் அடைவு, வாசிப்புத் திறன், இடைநின்ற மாணவர்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் துாய்மை பணி, நாய்கள் கருத்தடை மையம், மாடுகளை பராமரிக்கப்படும் மையம், நுாலகம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். திண்டுக்கல் மேற்கு தாசில்தார் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அலுவலர்களின் ஆய்வு அறிக்கையை பார்வையிட்டார். டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, திட்ட இயக்குநர்கள் திலகவதி, சதீஸ்பாபு, கூட்டுறவு இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஆர்.டி.ஓ., சக்திவேல் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ