உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வத்தலக்குண்டில் மதுரை ரவுடி கொலை

வத்தலக்குண்டில் மதுரை ரவுடி கொலை

வத்தலக்குண்டு:திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் மதுரையை சேர்ந்த ரவுடி கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டார்.மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்தவர் ரவுடி சிவமணி 30. இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சிவமணி தனது கூட்டாளிகளுடன் காரில் கொடைக்கானல் சென்றார். வத்தலக்குண்டு அருகே வந்தபோது சிவமணி ,கூட்டாளிகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சிவமணியின் கழுத்தை அறுத்த கூட்டாளிகள் அரை உயிராய் துடித்துக் கொண்டிருந்த சிவமணியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பினர்.வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான போலீசார் மதுரையில் பதுங்கி இருந்த சிவமணி கூட்டாளிகளான மதுரை வில்லாபுரம் சூர்யா 25, ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த மணிகண்டன் 25, அருண்பாண்டி 28, முனியசாமி 30 ,கார் டிரைவர் சரத் 35, ஆகியோரை கைது செய்தனர். போலீசார் விசாரணையில் , மூன்று ஆண்டுகளாக கேங் லீடராக இருந்த சிவமணி கூட்டாளிகளை படாதபாடு படுத்தி வந்ததாகவும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கொலை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி