உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

நத்தம்: நத்தம்-கொண்டையம்பட்டி மந்தையம்மன் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.30ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை ஆறு கால யாகசாலை பூஜை தொடர்ந்து காசி, பல்வேறு புனித ஸ்தலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்த குடங்கள் கோபுர உச்சிக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது . வானத்தில் கருடன்கள் வட்டமிட்டன. அன்னதானமும் வழங்கப்பட்டன.வேடசந்துார்: வேடசந்துார் கடைவீதியில் உள்ள சமேத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மதுரை வீரன் பாலசுப்பிரமணியர், அன்னகாமாட்சியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. ஊர் முக்கியஸ்தர்கள் கிருஷ்ணசாமி, நடராஜன், பூஜாரி தங்கவேல், கோயில் நிர்வாகிகள் பழனிச்சாமி, தில்லை சந்திரன், தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பழனிச்சாமி, பரமசிவம் பங்கேற்றனர்.தொப்பம்பட்டி: பழநி கோரிக்கடவு பகுதியில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சோம காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. செயல் அலுவலர் சங்கீதா, ஆய்வாளர் சுவாமிநாதன், பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை