மகாத்மா மனநல மருத்துவமனை திறப்பு விழா
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வட மதுரையில் மகாத்மா மனநல மருத்துவமனை திறப்பு விழா நடந்தது. ஒரு ஏக்கர் பரப்பளவில் இரண்டு தளத்துடன் புத்தாக்க பயிற்சி மையம், மனநோய் சிகிச்சை மையம், யோகா, பிசியோதெரபி அறை, ஆய்வகம் என விரிவாக்கம் செய்யப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையின் திறப்பு விழாவுக்கு மகாத்மா மனநல மருத்துவமனையில் மூத்த மனநல மருத்துவர் பாலகுரு, ஆலோசனை மனநல மருத்துவர் ஷர்மிளா தலைமை வகித்தனர். மருத்துவமனையின் தரைத்தளத்தை செல்லமுத்து டிரஸ்ட்டின் மனநல மூத்த மருத்துவர் ராம சுப்பிரமணியன், ஐ.ஜி., ஜெயஸ்ரீ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். முதல் தளத்தை மெட்ரோ பேப்ரிக்ஸ் நிறுவனர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். புத்தாக்க பயிற்சி மையத்தை பரமசிவம், எஸ்.கே.சி. டெக்ஸ்டைல் சண்முகவேல் திறந்து வைத்தனர். இங்கு, 50 படுக்கை வசதிகளுடன், மனநோய், மனநல ஆலோசனை, குடிநோய் மற்றும் போதை மறுவாழ்வுக்கான சிகிச்சையுடன், யோகா, உடற்பயிற்சி, தியானக்கூடம், பிசியோதெரபி உள்ளிட்ட இயன்முறைகள் மூலமாகவும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திறப்பு விழாவில், வெள்ளைச்சாமி, லக்ஷ்மி, சந்திரா, ராம் பிரியா சிவகுமரன், லக்ஷ்மண பிரபு, தர்ஷன், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.