உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் மலேசிய சுற்றுலா பயணிகள் காயம்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் மலேசிய சுற்றுலா பயணிகள் காயம்

கொடைக்கானல்:கொடைக்கானலில் மலேசிய சுற்றுலா பயணிகள் வந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் 12 பேர் காயமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு மலேசியா மலாக்கா பகுதியைச் சேர்ந்த 13 பேர் சுற்றுலா வந்தனர். வேனை மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரன் 38, ஓட்டினார். பழநி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து கொடைக்கானலுக்கு வந்த நிலையில் பழநி ரோட்டில் வெள்ளைப்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சுற்றுலா பயணிகளான லோகராஜன் 35, லட்சுமி 47,பாஸ்கரன் 48, பலத்த காயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை