மேலும் செய்திகள்
ரோட்டில் கவிழ்ந்த கன்டெய்னர் லாரி
22-Aug-2025
வேடசந்தூர்,: வேடசந்தூர் சுள்ளெறும்பு நால்ரோட்டை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாலமுருகன் 45. இவர் செப்.4 ம் தேதி வீட்டின் கதவை திறந்து வைத்து துாங்கி எழுந்து பார்த்தபோது பீரோ திறக்கபட்டு துணிகள் கீழே வீசப்பட்டிருந்தது. தொடர்ந்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த இரண்டரை பவுன் செயின் காணாமல் போயிருந்து தெரிய வந்தது. வேடசந்தூர் போலீசார் சி.சி.டி.வி., பதிவுகளை கொண்டு நடத்திய விசாரணையில் ஒட்டன்சத்திரத்தில் பதுங்கியிருந்த, ரெட்டியார்சத்திரம் கதிரியன் குளத்தைச் சேர்ந்த ராஜசேகரனை பிடித்தனர். விசாரணையில் ராஜசேகர் நகையை திருடியதையும், திருடுவதையே முழு நேர தொழிலாக கொண்டுள்ளதும், பல்வேறு மாவட்டங்களில் 40 வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
22-Aug-2025