உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

 மார்க்சிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

வேடசந்துார்: வேடசந்தூர் விட்டல்நாயக்கன்பட்டி அருகே குடகனாற்றில் ரசாயன கழிவுகளை கொட்டிய டேங்கர் லாரியை பொது மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் இன்று வரை கழிவுகளை கொட்டிய லாரி மீதோ, கழிவுகளை அனுப்பிய ஆலை மீதோ வழக்குப் பதியவில்லை. கேட்டால் முறையான பதில் இல்லை. இந்நிலையில் வேடசந்துார் ஒன்றிய மா. கம்யூ., கட்சியின் சார்பில் வேடசந்துார் ஆத்துமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பெரியசாமி, நாகராஜ், மூத்த நிர்வாகி சுகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பிரபாகரன், திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் சரத்குமார், மாநில குழு உறுப்பினர் ராணி, மாவட்ட குழு உறுப்பினர் பாக்கியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை