உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பால் சொசைட்டியில் இல்லை செட் மழைநீரால் கெட்டுப்போகிறது பால்

பால் சொசைட்டியில் இல்லை செட் மழைநீரால் கெட்டுப்போகிறது பால்

குஜிலியம்பாறை: ஆனைப்பட்டி கூட்டுறவு பால் சொசைட்டியில் செட் வசதி இல்லாததால் இங்கு கொண்டுவரும் பாலில் மழை நீர் விழுவதால் பால் கெட்டு போகும் நிலை உள்ளது. கருங்கல் ஊராட்சி ஆனைப்பட்டி கூட்டுறவு பால் சொசைட்டியில் ஒட்டுமொத்த விவசாயிகளும் காலை,மாலை நேரங்களில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வந்து பால் ஊற்றி செல்கின்றனர். இந்த நேரங்களில் மழை வந்தால் மழையில் நனைந்து கொண்டே நிற்கும் நிலை உள்ளது. அங்குள்ள ஊழியர்கள், பொதுமக்களுக்கு கழிப்பறை வசதி எதுவும் இல்லை. கூட்டுறவு பால் சொசைட்டியில் பயனாளிகள் நிற்பதற்கான செட் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம் கூறியதாவது : இரண்டு நாட்களுக்கு முன்பு பால் கெட்டுப் போனதால் 2 ஆயிரத்து 500 லிட்டர் பாலை வீணாக கீழே கொட்டினர். இதற்கெல்லாம் காரணம் விவசாயிகள் பாலை கொண்டு வந்து மழையில் நனைந்து கொண்டே நிற்கின்றனர். அதனால் கூட பால் கெட்டுப் போய் இருக்கலாம். விவசாயிகள் மழையில் நனையாமல் நிற்கும் வகையில் செட் அமைக்க வேண்டும். அதேபோல் கழிப்பறை வசதியும் தேவை என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி