உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தகுதியானவர்களுக்கு வீடு தேடி வேலை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

தகுதியானவர்களுக்கு வீடு தேடி வேலை அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி

செம்பட்டி: தகுதி உள்ள இளைஞர்கள், மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு அரசு வேலை வீடு தேடி வரும்''என அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.ஆத்துார் தொகுதிக்குட்பட்ட ஆத்துார், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பகுதிகளில் கொட்டாரப்பட்டி, பித்தளைப்பட்டி, எஸ்.கோடாங்கிபட்டி உள்ளிட்ட பகுதி கோயில் கும்பாபிஷேகம், கோயில் திருவிழா, தனிநபர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் பலரும் மனு அளித்தனர் அப்போது அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் இளைஞர்களின் ஒவ்வொரு முயற்சியும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலினின் கண்காணிப்பில் குக்கிராமங்களும் நகரங்களுக்கு இணையான வளர்ச்சியை பெற்று வருகின்றன.ஆத்துார் தொகுதியில் தகுதி உள்ள இளைஞர்கள், மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வீடு தேடி வரும். கிராம இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். இதுவரை ஒரு ரூபாய் கூட செலவின்றி அரசு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. வருங்காலங்களில் அங்கன்வாடி சத்துணவு துறை சார்ந்த பணி வாய்ப்புகளும் தகுதி உள்ள நபர்களை தேடி வரும் என்றார். தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி