உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் அமைச்சர் பெரியசாமி தகவல்

பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் அமைச்சர் பெரியசாமி தகவல்

சின்னாளபட்டி: '' துாய்மை காவலர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு கூடுதல் ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது''என அமைச்சர் பெரியசாமி பேசினார்.ஆத்துார் ஒன்றியம் பிள்ளையார்நத்தம் ஊராட்சியில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனுக்களை பெற்ற அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சியில் ஏழை முதியோருக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை அ.தி.மு.க., அரசு நிறுத்தியது. 10 ஆண்டுகளாக இதனை மீண்டும் பெற முடியாமல் தவித்த பெரும்பாலோருக்கு தற்போது மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆத்துார் தொகுதியை பொறுத்தவரை 10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர், மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்காமல் உள்ளனர். தகுதியுள்ள மகளிரை தேடி கண்டுபிடித்து உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பட்டா கேட்டு பலரும் மனு கொடுத்துள்ளனர். பட்டா உள்ளிட்ட வருவாய் துறை சார்ந்த சேவைகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், பிற பணியாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் கூடுதலாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். ஆர்.டி.ஓ., சக்திவேல் தலைமை வகித்தார். தாசில்தார் முத்துமுருகன், ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் மகேஸ்வரி, தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை