உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் காணாமல் போன அலைபேசிகள் ஒப்படைப்பு

பழநியில் காணாமல் போன அலைபேசிகள் ஒப்படைப்பு

பழநி : பழநியில் காணாமல் போன அலைபேசிகள் சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் கண்டறிந்து உரியவர்களிடம் எஸ்.பி., பிரதீப் தலைமையில் போலீசார் ஒப்படைத்த நிலையில் புதிய சிக்னல்கள் , செக்போஸ்ட்களை எஸ்.பி., துவங்கி வைத்தார். பழநி பகுதியில் திண்டுக்கல்- கோயமுத்தூர் இடையே நான்கு அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி புஷ்பத்துார் பகுதியில் சாமிநாதபுரம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் புதிய செக் போஸ்ட் அமைக்கப்பட்டது. இதை நேற்று திண்டுக்கல் எஸ்.பி.,பிரதீப் துவங்கி வைத்தார். பழநி நகரில் மயில் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்ட புதிய போக்குவரத்து சிக்னல்களை துவங்கி வைத்தார். வேல் ரவுண்டான பகுதியில் போலீஸ் புற காவல் நிலையத்தை துவங்கி வைத்தார். பழநி டவுன் போலீஸ் ஸ்டேஷனில் சி.சி.டி.வி., கண்காணிப்பு அறையை ஆய்வு செய்தார். காணாமல் போன 20 அலைபேசிகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பழநியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பரிசுகள் ,கேடயங்கள் வழங்கப்பட்டன. பழநி டி.எஸ்.பி., தனஞ்செயன் கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை