உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மார்கழி துவங்கியது; கோயில்களில் பஜனை, திருவிளக்கு பூஜை

மார்கழி துவங்கியது; கோயில்களில் பஜனை, திருவிளக்கு பூஜை

திண்டுக்கல்: மார்கழி மாதத்தின் முதல் நாளான நேற்று திண்டுக்கல்லில் உள்ள முக்கிய கோயில்களில் பஜனை , திருவிளக்கு பூஜை வழிபாடுகள் நடந்தது.திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் காலை 5 :00மணிக்கு திருப்பள்ளி எழுச்சி சிறப்பு சேவை நடந்தது. பின்னர், சுவாமி காளகத்தீசுவரர் - ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்- அபிராமி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு வழிபாடு தொடங்கியது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் காலை 5:30 மணிக்கு மார்கழி மாத திருவிளக்கு வழிபாடு நடந்தது. 11 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. இதில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், பழநி ரோடு செல்லாண்டியம்மன், பாரதிபுரம் மாதா புவனேசுவரி அம்மன், மேற்கு கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன் உட்பட முக்கிய கோயில்களில் மார்கழி மாத திருவிளக்கு வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சர்வ அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமானோ கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அரண்மனை சந்தனக்கருப்பு சுவாமி கோயில், கோவில்பட்டி கைலாசநாதர், பகவதி அம்மன், காளியம்மன், ராக்காயி அம்மன், தில்லை காளியம்மன், திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில்களிலும் மார்கழி மாத பிறப்பையொட்டி அதிகாலை சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.* பழநி அ.கலையம்புத்துார் அக்ரஹாரம் ஸ்ரீ கைலாசநாதர், கல்யாணி அம்மன் கோயிலில் மார்கழி துவங்கிய நேற்று அதிகாலையில் மார்கழி பஜனை குழுவினரால் பஜனை வீதி உலா துவங்கியது. கீர்த்தனைகள், திருப்பாவை, திருவெம்பாவை, பதிகங்கள், நாமாவளி பாடல்களை பாடியப்படி சென்றனர். காலை 7:30 மணிக்கு கோயிலில் பஜனை பஜனையை நிறைவு செய்தனர். இவர்கள் மார்கழி முடியும் வரை தொடர்ந்து அதிகாலையில் பஜனை பாடல்கள் பாடி வருவார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ