உள்ளூர் செய்திகள்

கொசு ஒழிப்பு பணி

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பேரூராட்சி பகுதியில் கொசுக்கள் உற்பத்தியை கட்டுப்படுத்துதல், டெங்கு, வைரஸ் பரவலை தடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் கொசு ஒழிப்பு புகை மருந்து தெளிக்கப்பட்டது. தண்ணீர் தேங்கும் பகுதிகளில் கொசு முட்டை ஒழிப்பு, பிளீச்சிங் பவுடர் துாவுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. சுகாதார பணியாளர்கள் கூறுகையில், ‘சமீபத்திய மழையால் தொற்று பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே கொசு ஒழிப்பு, வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடியிருப்புகள் மட்டுமின்றி தினசரி மார்க்கெட், வணிக நிறுவனங்கள், வங்கிகள், காய்ச்சல் பாதிப்பு பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி