உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொசுபத்தி புகை : பள்ளியில் இரு மாணவியர் மயக்கம்

கொசுபத்தி புகை : பள்ளியில் இரு மாணவியர் மயக்கம்

கன்னிவாடி: கொசு விரட்டும் பத்தி புகை நெடி காரணமாக பள்ளி மாணவியர் இருவர் மயக்கமடைந்தனர். கன்னிவாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பகுதியில் சமீபகாலமாக கொசு, ஈக்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பள்ளி நேரங்களில், சில வகுப்புகளில் கொசு விரட்டும் பத்தி கொளுத்தி வைக்க துவங்கியுள்ளனர். நேற்று 10ம் வகுப்பில் கொசு விரட்டி புகை நெடி காரணமாக, சற்று நேரத்தில் 2 மாணவியர் மயக்கம் அடைந்தனர். பெற்றோருக்கு தகவல் தெரிவித்த பள்ளி ஆசிரியர்கள், மாணவியரை கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். இதில் ஒரு மாணவிக்கு மயக்கம் தெளிந்தது. மற்றொரு மாணவி, மயக்கம் தெளியாத நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை