உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒற்றை யானை ரோட்டில் உலா: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஒற்றை யானை ரோட்டில் உலா: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் - பாச்சலுார் ரோட்டில் உலா வரும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். ஒட்டன்சத்திரம் வனச்சரக எல்லைக்குள் யானைகள், மான்கள், பன்றிகள், சிறுத்தை, காட்டு மாடுகள் அதிகம் உள்ளன. யானைகள் அவ்வப்போது இரை ,தண்ணீருக்காக மக்கள் வாழ்விடங்களில் நுழைந்து விடுகிறது. சில மாதங்களாக ஒட்டன்சத்திரம் மலை கிராமங்களான வடகாடு, பெத்தேல்புரம், புலிக்குத்திக்காடு, சிறுவாட்டுக்காடு பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம் உள்ளது. நேற்று முன் தினம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பாச்சலுார் சென்ற அரசு பஸ் புலிக்குத்தி காடு அருகே சென்ற போது ரோட்டின் நடுவே ஒற்றையானை நின்று கொண்டு அச்சுறுத்தியது. சில மணி நேர காத்திருப்புக்கு பின் யானை வனத்துக்குள் சென்ற பின்பு வாகனங்கள் சென்றன. இந்த ரோட்டில் வனத்துறையினர் அவ்வப்போது பட்டாசுகளை வெடித்து யானையை விரட்டினாலும் அடுத்த சில நாட்களில் மீண்டும் வந்து விடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ