உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்த முலாம் பழம்

வரத்து அதிகரிப்பால் விலை பாதியாக குறைந்த முலாம் பழம்

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் 2 நாட்களுக்கு முன் கிலோ ரூ.50க்கு விற்பனையான முலாம்பழம், வரத்து அதிகரிப்பால் பாதியாக குறைந்து ரூ.25க்கு விற்றது.கோடை காலம் தொடங்கியதால் நுங்கு, இளநீர், தர்பூசணி, முலாம் பழம் அதிக அளவு விற்பனைக்கு வந்துள்ளது. முலாம்பழத்தைப் பொறுத்தவரையில் திண்டிவனம், பெங்களூரு சென்னை பகுதிகளில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வார காலமாக முலாம்பழம் கிலோ ரூ.50க்கு விற்பனையான நிலையில் வரத்து அதிகரிப்பால் நேற்று கிலோ ரூ.25க்கு விற்பனையானது. விலை சரிவால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை