மேலும் செய்திகள்
முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
27-May-2025
சின்னாளபட்டி: தொப்பம்பட்டி அருகே முத்தம்பட்டியில் சக்தி விநாயகர், காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய விழாவில் பிருந்தாவன தோப்பில் இருந்து தீர்த்தம் அழைப்பு, விக்னேஷ்வர பூஜை, மூலிகை வேள்வியுடன் இரு கால யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தரிசனம் செய்தார். ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
27-May-2025