உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்திகள் சில வரிகளில்...

செய்திகள் சில வரிகளில்...

ஆர்ப்பாட்டம் பழநி : வடக்கு வாடிப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பகுதியில் செங்கல் சூளை அமைத்திட தனியார் நிறுவனங்கள் துவங்கியுள்ளன. இப்பகுதிக்கு அருகே குடியிருப்புகள், விவசாய நிலங்கள் உள்ளதால், விதிமுறைகளை மீறி செங்கல் சூளை அமைப்பதை தடுக்க வேண்டுமென கோரி பழநி, தாசில்தார் அலுவலக வளாகத்தின் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உங்களுடன் ஸ்டாலின் முகாம் நத்தம் : செல்லப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் சேக் சிக்கந்தர் பாட்சா, பழனிச்சாமி, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். யூனியன் ஆணையாளர் கிருஷ்ணன் வரவேற்றார். தாசில்தார் ஆறுமுகம் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வேடசந்தூர் : நாகம்பட்டி ஊராட்சி அய்யனார் கோயில் மண்டபத்தில், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. எம்.எல்.ஏ.,காந்திராஜன் முகாமை துவக்கி வைத்தார். தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், பி.டி.ஓ., சரவணன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கவிதா, வீரா.சாமி நாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், தி.மு.க., நிர்வாகிகள் ரவிசங்கர், சுரேஷ், ஊராட்சி முன்னாள் தலைவர் தங்கவேல், ஊராட்சி செயலாளர் கணேசன் பங்கேற்றனர். சட்ட உதவி மைய திறப்பு விழா திண்டுக்கல் : மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சட்ட உதவி மைய திறப்பு விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாராதா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நீதிபதி திரிவேணி, முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகஉதவி இயக்குநர் சுகுணா, வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். -ஆலமரத்தில் பற்றிய தீ நத்தம் : பண்ணுவார்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் ஆலமரத்தடியில் விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆலமரத்தில் தேன்கூட்டை கலைப்பதற்காக தீ வைத்துள்ளனர். அப்போது காற்று பலமாக அடித்ததால் அந்த தீ எதிர்பாராத விதமாக ஆலமரத்தில் பிடித்து எரிய தொடங்கியது. நத்தம் தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை