செய்திகள் சில வரிகளில்...
மாணவர்களுக்கு பயிற்சி திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆத்துப்பட்டி பிரிவு தனியார் நாற்றாங்கால் பண்ணையில் 10 நாட்கள் அகப்பயிற்சி தரப்பட்டது. பழக்கன்றுகள், மரக்கன்றுகள், பூச்செடிகள் உற்பத்தி, விற்பனை பற்றி மாணவர்கள் பயிற்சி பெற்றனர். தலைமையாசிரியர் ஆனந்த் கார்த்தி வழிகாட்டுதலின்படி வேளாண் ஆசிரியர் ஏற்பாடுகளை செய்தார். மலரஞ்சலி திண்டுக்கல்: வீரபாண்டிய கட்டபொம்மனின் 226 வது ஆண்டு குருபூஜை, வ.உ.சி., கடல் வணிகம் மேற்கொண்ட 120 வது ஆண்டு வெற்றி தினம், சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் 124 ம் ஆண்டு பிறந்த தினம், தேசபக்தர் நானாஜிதேஷ்முக் - 110 வது பிறந்ததினம் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் நற்பணி மன்றம் சார்பில் அனுசரிக்கப்பட்டது. மன்ற பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் அருணகிரி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பேசினார். நிர்வாகி நாகரத்தினம் நன்றி கூறினார். வைரவேல் ஏற்பாடுகளை செய்தார்.