உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நகராட்சி விரிவாக்க அறிவிப்பால் பழநி மக்கள் ஏமாற்றம்

நகராட்சி விரிவாக்க அறிவிப்பால் பழநி மக்கள் ஏமாற்றம்

பழநி; நகராட்சி விரிவாக்கம் குறித்த அறிவிப்பில் பழநி நகராட்சி இல்லாததால் பழநி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பழநி நகராட்சி பகுதியை விரிவுபடுத்தி நகராட்சியை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகாலமாக பழநி மக்களிடையே இருந்து வந்தது. பழநி நகராட்சி பகுதிக்கு அருகே உள்ள சிவகிரிபட்டி, கலிக்கநாயக்கன்பட்டி, கோதைமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளை இணைக்க நகராட்சி சார்பில் அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் தமிழக அரசு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளின் மறு சீரமைப்பு தொடர்பான, நகர்ப்புற உள்ளாட்சி விரிவாக்கம் , உருவாக்கம் செய்வதற்கான உத்தேச பகுதிகள் அறிவிக்கப்பட்டன.41 நகராட்சிகளுடன் 147 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சி இணைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. அதில் பழநி நகராட்சி விரிவாக்கம் குறித்த அறிவிப்பு இல்லை. இதனால் பழநி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ