உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் தைப்பூச தெப்ப தேராட்டம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பழநியில் தைப்பூச தெப்ப தேராட்டம்; திரளான பக்தர்கள் தரிசனம்

பழநி : பழநி முருகன் கோயில் தைப்பூச திருவிழா தெப்ப தேேராட்டத்தில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் பிப். 5 ல் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா துவங்கியது . ஆறாம் நாளான பிப்.,10 மாலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் ,அன்று இரவு வெள்ளி தேரோட்டம்,பிப். 11ல் தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது.இதை தொடர்ந்து நேற்று (பிப். 14 ) காலை பெரிய நாயகி அம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் கோயில் நடையை அடைத்தனர். அதன்பின் ஓதுவார் சிவ நாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தி வைத்தார். அதன் பின் கோயில் நடை திறக்க வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியாக நேற்று இரவு தெப்பத்தேரில் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி எழுந்தருள தெப்ப தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதன்பின் கொடி இறக்குதலுடன் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி