பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.87 கோடி
பழநி:பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.2.87 கோடி கிடைத்தது.உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 87 லட்சத்து 51 ஆயிரத்து 237, வெளிநாட்டு கரன்சி 1154 மற்றும் 790 கிராம் தங்கம், 15.662 கிலோ வெள்ளி கிடைத்தது. இப்பணியில் கோயில் அதிகாரிகள், பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.