உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  67 அடியை எட்டிய பரப்பலாறு அணை

 67 அடியை எட்டிய பரப்பலாறு அணை

ஒட்டன்சத்திரம்: மழையால் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை 67 அடியாக உயர்ந்தது. ஒட்டன்சத்திரம் மலைப்பகுதியில் பரப்பலாறு அணை உள்ளது. சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது. 90 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 67 அடி வரை தண்ணீர் உள்ளது. அணை நிரம்பினால் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணை நவம்பர் இறுதி, டிசம்பர் முதல் வாரத்தில் முழு அளவை எட்டுவது வழக்கம். இந்தாண்டு போதிய மழை பெய்யாமல் இருப்பதால் அணையின் நீர்மட்டம் சிறிதளவு மட்டுமே உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ