உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செய்தி சில வரிகளில் ஓய்வூதியர் சங்க கூட்டம்

செய்தி சில வரிகளில் ஓய்வூதியர் சங்க கூட்டம்

ஓய்வூதியர் சங்க கூட்டம் திண்டுக்கல் : தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டுக்கல் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க கட்டடத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் நாராயணசாமி வரவேற்றார். செயலர் செல்ராஜ் ,மாநில பொதுச்செயலர் மாயமலை பேசினர். ஜூலை22 ல் நடக்கவுள்ள ஒப்பாரி போராட்டத்தில் கலந்து கொள்ளமுடிவு செய்யப்பட்டது. பொருளாளர் குமரம்மாள் நன்றி கூறினார்.மாற்றுத்திறனாளிகள் முகாம்பழநி :பழநி ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் அலிம்கோ நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகள் ,முதியோர் நலன்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. தாசில்தார்கள் பிரசன்னா, சசி, பி.டி.ஓ.,க்கள் நளினா, வேதா முன்னிலை வகித்தனர். 700க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பயன் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ