உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் : பணி ஓய்வு பெறும் அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும். உயிரிழந்த ஓய்வூதியர் குடும்பத்திற்கு ஓய்வூதியம் ரூ.7845 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி,சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் யூனியன் அலுவலகம் அருகே நடந்த இதற்கு சங்க மாவட்டத்தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் மணிக்காளை பேசினார். சங்க நிர்வாகிகள் எராமமூர்த்தி, விஜயகுமார், ஜெயசீலன், முபாரக் அலி, ராஜமாணிக்கம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ