சாக்கடை அமைக்காததால் சுகாதாரக்கேடு பழநி 28 வது வார்டு மக்கள் அவதி
பழநி: சாக்கடைகள் முறையாக அமைக்காததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு , பராமரிப்பு இல்லாத பூங்கா என பழநி நகராட்சி 28 வது வார்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.குரும்பபட்டி, பாட்டாளி தெரு, திலகர் வீதி பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் குரும்பபட்டியில் சாக்கடை கழிவு நீர் வெளியேறாத தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. தெரு விளக்கு எரிவதில்லை
குணா, தனியார் ஊழியர்,பாட்டாளி தெரு : திலகர் வீதியில் உள்ள பூங்கா பயன்பாடு இல்லாமல் உள்ளது. இப்பகுதியில் தெரு விளக்கு முறையாக எரிவது இல்லை. இரவில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது. தெருநாய் தொல்லை அதிக அளவில் உள்ளது. கொசு தொல்லை கட்டுப்படுத்த வேண்டும். குப்பையை அகற்ற வேண்டும். பராமரிப்பு இல்லா சாக்கடை
சூர்யாதேவி,குடும்பத்தலைவி, பாட்டாளி தெரு: பாறைக்குழி பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வருகிறோம் .இப்பகுதியில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பு இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். படிக்கும் குழந்தைகள் பாதிக்கின்றனர். இப்பகுதி சாக்கடைகளை முறையாக பராமரிக்க வேண்டும். கொசுத்தொல்லை
முருகன், பெயிண்டர், குரும்பபட்டி : சாக்கடை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் புழுக்களுடன் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .கொசுத்தொல்லை அதிகரித்து வருவதால் கொசு மருந்து அடிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய் தொல்லை
அகிலாண்டம், கவுன்சிலர்(அ.தி.மு.க.,) : பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதால் சாக்கடை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் .பூங்கா விரைவில் சீரமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. பாறைகுழி பகுதியில் வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாய் தொல்லை குறித்து நகராட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது என்றார்.பழநி நகராட்சி 28 வது வார்டில் பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டி உள்ள பூங்கா