உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புல் ஹாக்கி மைதானம் அமைக்க மனு

புல் ஹாக்கி மைதானம் அமைக்க மனு

திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி விளையாட்டு வீரர்கள் நல்வாழ்வு சங்க தலைவர் ஞானகுரு தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில், திண்டுக்கல்லில் செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரர்களுக்கு சரியான மைதானம் இல்லாததால் வெற்றிவாய்ப்புகளை இழக்கின்றனர். இதனால் கல்லூரி, பள்ளி விளையாட்டு மைதானங்களை நாட வேண்டி உள்ளது. பலமுறை மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்து செயற்கை புல் ஹாக்கி மைதானம் அமைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை