விளையாட்டு மைதானம் திறப்பு
திண்டுக்கல்; வத்தலக்குண்டு சாலையில் லேர்ண்ஃபோர்ட் ஸ்போர்ட்ஸ் பார்க் எனும் பெயரில் நவீன வசதிகளுடன் புதிய விளையாட்டு மையம் நேற்று திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை, இயக்குநர் கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இங்கு, ஸ்கேட்டிங், கூடைப்பந்து, கைப்பந்து, பிக்கில் பந்து, கால்பந்து, கிரிக்கெட் டர்ப், கபடி, வில்வித்தை ஆகிய விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் நவீன வசதிகள் உள்ளது. ஓட்டப்பந்தய வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் ஓட்டப்பந்தய ட்ராக், உடற்பயிற்சி உபகரணங்கள், நடைப்பயிற்சி பாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதில்,ஈஸ்வர் எஜு பவுன்டேசன் நிறுவனத்தின் இயக்குநர்கள் சுமதி விஜயகுமார், கமலேஸ்வர், கமலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.