உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விலை இன்றி செடியில் விடப்படும் தக்காளி ; பயன்பாட்டிற்கு வராத குளிர்சாதன கிடங்கு

விலை இன்றி செடியில் விடப்படும் தக்காளி ; பயன்பாட்டிற்கு வராத குளிர்சாதன கிடங்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் நிலக்கடலை, தக்காளி, கத்தரி , வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற குறிப்பிட்ட பயிர் வகைகளை தொடர்ந்து பயிரிட்டு வருகின்றனர். நவம்பர், டிசம்பரில் தக்காளி பயிரிடுவதில் விவசாயிகள் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர். அடுத்த 60 நாட்களில் தக்காளி அறுவடைக்கு வர ஜனவரி, பிப்ரவரியில் ஓரளவு விலை இருந்தது. மார்ச் துவங்கியதில் இருந்தே போதிய விலை இல்லை. விவசாயிகள் கொண்டு செல்லும் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி குறைந்தது ரூ.40 முதல் அதிகபட்சமாக ரூ.80 வரை தான் விற்கிறது. விலை கட்டுபடியாகாமல் தக்காளி பறிப்பதை தவிர்த்து செடியிலே விட்டுவிட்டனர்.தக்காளிக்கு போதிய விலை இல்லாத நிலையில் கிராமங்களில் வாகனங்களில் கொண்டு சென்று 8 கிலோ தக்காளியை ரூ.50 க்கு வியாபாரிகள் விற்று வருகின்றனர். தக்காளி விவசாயத்தில் கூடுதலான விவசாயிகள் ஈடுபட்டதும் விலை குறைவிற்கு ஒரு காரணம் ஆகும்.தக்காளி விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக உற்பத்தி ஆகும் தக்காளியை சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைக்கும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை புதிதாக அமைக்கவும், ஏற்கனவே உள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய கிடங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
மார் 23, 2025 22:10

விவசாயிகளுக்காக தொலைக்காட்சியில் அவ்வப்பொழுது விழா எடுக்கும் நடிகர் இது குறித்து ஏன் ஒரு போராட்டம் எடுக்கக்கூடாது? தனது சொந்த செலவில், குறைந்த கட்டணத்தில் குளிர்பதனக் கிடங்குகளைக் கட்டி வாடகைக்கு விடலாமே இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒருவர் முயற்சி எடுத்தால் கூட அதன் மூலம் ஓரளவு வருமானம் ஈட்டலாம் .சமுதாய சேவை செய்தாற்போலவும் ஆகுமே. ஊடகங்கள் மாவட்டம் வாரியாக குளிப்பதனக் கிடங்குகள் எத்தனை தேவை எத்தனை கட்டப்பட்டு இருக்கிறது எத்தனை இயங்குகிறது என்றெல்லாம் செய்தி வெளியிடலாம். இது போல செயல்படாத திட்டங்களைக் குறித்து அறிவிப்புக்காக ஒரு பக்கம் ஒதுக்கலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை