உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சர்ச் விழாவில் வரி வாங்காது ஒதுக்குவதாக போலீசில் புகார்

சர்ச் விழாவில் வரி வாங்காது ஒதுக்குவதாக போலீசில் புகார்

வேடசந்துார்: மாரம்பாடி அந்தோனியார் சர்ச் தேர் திருவிழாவிற்கு வரி வாங்காமல் ஒதுக்குவதாக இதே ஊரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஆரோக்கியதாஸ் உட்பட 5 பேர் வேடசந்துார் டி.எஸ்.பி., பவித்ராவிடம் மனு கொடுத்துள்ளனர். அதில், 2024 ல் வரவு செலவு கணக்கு கேட்டோம். இது நாள் வரை கணக்கு கொடுக்கவில்லை. நாங்கள் வரி கணக்கு கேட்டதால் எங்களிடம் வரி வாங்க மறுக்கிறார்கள். எங்கள் குடும்பத்தினர் யாரும் பங்கேற்க கூடாது எனவும் முடிவு செய்துள்ளனர். எங்களிடமும் வரிப்பணம் வாங்கி திருவிழாவை ஒற்றுமையாக நடத்த பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Antony Tharcius
ஜன 10, 2025 10:25

மக்களை அடக்கும் ஒடுக்கும் முறை எந்த வடிவில் இருந்தாலும் அது மனித உரிமை மீறல் என்பதே உண்மை. மக்களுக்காகவே தலைவர்கள் என்பதை மறந்து தலைவர்களுக்காகவே மக்கள் என்ற மாயை உருவாக்கத்தின் விளைவுகளே இது போன்ற அநாகரிகமான மனித உரிமை மீறலான செயல்.


முக்கிய வீடியோ