உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்...

தொழிலாளி தற்கொலை

வடமதுரை: அய்யலுார் எஸ்.கே.நகரை சேர்ந்தவர் பழனிவேல் 60. இப்பகுதி ரேஷன் கடையில் கூலி தொழிலாளியாக பணிபுரிந்த இவர் உடல் நலக்குறைவால் விஷம் குடித்து இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., தாவூது உசேன் விசாரிக்கிறார்.

குளத்தில் மூழ்கிய 3 பெண்கள் மீட்பு

பழநி: பழநிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இடும்பன் குளத்தில் குளித்த பிறகு கோயில் செல்வது வழக்கம்.அதன்படி நேற்று சிவகங்கை சேர்ந்த பாதயாத்திரை பக்தர்கள் இளவரசி 35, ஈஸ்வரி 40, சாந்தி 55 ,குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென ஆழமான பகுதிக்கு சென்று மூழ்கினர். தீயணைப்புத்துறையினர் அவர்களை உயிருடன் மீட்டனர்.

மாடு முட்டி பெண் காயம்

சாணார்பட்டி: கோபால்பட்டி அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன். இவரது மனைவி அழகம்மாள் 55. இவர்கள் வீட்டிலே ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக அழகம்மாள் அழைத்து சென்றார். அப்போது திடீரென பசுமாடு ஒன்று அழகம்மாள் வயிற்றில் குத்தியது.குடல் சரிந்த நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

பா.ஜ., நிர்வாகி கார்,வீடு மீது கல் வீச்சு

கொடைக்கானல்: கொடைக்கானல் சண்முகபுரத்தை சேர்ந்தவர் சரவணன் பா.ஜ., நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார், வீட்டின் மீது கல் எறிந்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

பயிற்சி மருத்துவர் படுகாயம்

நத்தம்:-சென்னை- அண்ணாநகரை சேர்ந்தவர் கணேஷ்ராம் 21. மதுரையில் தங்கி தனியார் மருத்துவமனையில் எம்.எஸ்., படித்து வருகிறார். டூவீலரில் -சேர்வீடு மேம்பால பகுதியில் வந்த போது தடுமாறி கீழே விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நத்தம் - எஸ்.ஐ., அருள்குமார் விசாரிக்கிறார்.ரயில் மோதி பலிசத்திரப்பட்டி : பழநி சத்திரப்பட்டி அருகே நேற்று முன்தினம் (ஜன.29) இரவு திருச்செந்துார் -பாலக்காடு ரயில் சென்றது. அப்போது அப்பகுதியில் நடந்து சென்ற 55 வயது ஆண் ரயில் மோதி இறந்தார். சந்தன கலர் முழு சட்டை, வெள்ளை கலர் வேட்டி, கண் கண்ணாடி அணிந்திருந்தார். பழநி ரயில்வே எஸ்.ஐ., பொன்னுச்சாமி விசாரிக்கிறார். தற்கொலைதிண்டுக்கல்: என்.எஸ். நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி கணேசன்54. குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆள் மாறி தாக்கிய நால்வர் கைது

வேடசந்துார்: பூத்தாம்பட்டி அருள் மனைவி துர்காதேவி 22. இவரிடம் இளைஞர் ஒருவர் அலைபேசியை கேட்டு வாங்கி மற்றொரு நபருக்கு கால் செய்துள்ளார். சிறிது நேரத்தில் துர்காதேவி அலைபேசிக்கு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் தவறாக பேசி உள்ளார். துர்கா தேவி கணவர் அருள் மனைவியிடம் பேசிய எண்ணுக்கு பேசியபோது , தில் இருந்தால் ஆத்துமேடு பாலத்திற்கு வா , அங்கு நான் பச்சை குத்திக்கொண்டுருக்கிறேன் கூறி உள்ளார். அருள் உட்பட நான்கு பேர் அங்கு சென்று பச்சை குத்திக்கொண்டு இருந்த சிவக்குமாரை முறையாக விசாரிக்காமலே தாக்கினர். இதுகுறித்த வீடியோ வைரல் ஆனது. வேடசந்துார் போலீசார் விசாரணையில் பிரச்னைக்கு சம்பந்தம் இல்லாத நபரை தாக்கியது தெரிந்தது. அருள், அவரது நண்பர் சரவணகுமார், 17 வயது சிறார் இருவர் என நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி