போலீஸ் ஓட்டிய கார் டூவீலரில் மோதி போலீஸ் பலி
வத்தலக்குண்டு,: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே போலீஸ்காரர் ஒட்டிய கார் மோதி டூவீலரில் சென்ற போலீஸ்காரர் பலியானார்.ராமநாதபுரம் கீழச்செல்வனூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக வேலை செய்பவர் சதீஷ்குமார். குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு காரில் சென்றார்.மதுரை மாடக்குளத்தைச் சேர்ந்த கணபதி 40. இவர் கூடல்நகர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணிபுரிந்தார்.இவர் மனைவி சங்கீதாவுடன் பழைய வத்தலக்குண்டு திருவிழாவில் பங்கேற்று விட்டு டூவீலரில் மதுரை நோக்கி சென்றார் (ஹெல்மெட் அணியவில்லை).கார் வத்தலக்குண்டு அருகே குளத்துப்பட்டி அரசு பெண்கள் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த டூவீலரில் மோதியது.டூவீலரை ஓட்டிய போலீஸ் கணபதி, மனைவி சங்கீதா 35, பலத்த காயமடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே கணபதி இறந்தார். சங்கீதா சிகிச்சை பெற்று வருகிறார். வத்தலக்குண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.