உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அரசியல் கட்சி பேனர்களால் மறைக்கப்பட்ட தபால் அலுவலகம்

அரசியல் கட்சி பேனர்களால் மறைக்கப்பட்ட தபால் அலுவலகம்

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் முன்பு போட்டி போட்டுக்கொண்டு அரசியல் கட்சிகள் பேனர் வைத்து தபால் அலுவலகத்தை மறைத்தது பொது மக்களைமுகம் சுளிக்க செய்துள்ளது.வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்ட் எதிரே தபால் அலுவலகம் முன்பு அரசியல் கட்சிகள், தனியார் நிறுவனங்கள் பேனர் வைப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி தபால் அலுவலகம் முகப்பில் நகர அ.தி.மு.க., சார்பில் பேனர் வைக்கப்பட்டது. தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை யொட்டி தி.மு.க.,வினர் தபால் அலுவலகத்தை முற்றிலும் மறைத்து பேனர் வைத்தனர். இந்த பேனர்களால் தபால் அலுவலகம் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. தபால் அலுவலகத்திற்குள் நுழைய கூட வழி விடாமல் பேனர் வைத்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். காளியம்மன் கோயில், திண்டுக்கல் ரோடு ,மதுரை ரோடு பகுதியில் மூன்று மாதங்களாக தொடர்ந்து டிஜிட்டல் பேனர்கள் வைத்தபடியே உள்ளதால் வணிக நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக வணிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இரு கட்சிகளின் செயல்பாட்டிற்கு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ