மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
30-Oct-2024
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை- காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரர்- அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 4 :00 மணிக்கு நந்தி, கொடிமரம்,காளகத்தீஸ்வரர், பத்மகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. ஆர்.எம்.காலனி - வி.ஐ.பி., நகர் ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை குபரேலிங்கேஸ்வரர் கோயிலில் நந்தி, ஸ்ரீ குபேரலிங்கேஸ்வரருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்ய பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது..திண்டுக்கல் ரயிலடி விநாயகர் கோயில் ,காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோயில், மேற்கு ரதவீதி சிவன் கோயில், முள்ளிப்பாடி ஆஞ்சநேயர் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் எம்.வி.எம்., நகர் தென் திருப்பதி வெங்டஜலபதி கோயில் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.நத்தம்: கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் செண்பகவல்லி ,கைலாசநாதருக்கு சிறப்பு பூஜை , தீபாராதனை நடந்தது. அங்குள்ள நந்தி சிலைக்கு 16வகை பொருட்களுடன் அபிஷேகம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நந்தி சிலைக்கு தீபாராதனை நடந்தது. கோயில் உள்பிரகாரத்தை சுற்றி சுவாமி புறப்பாடும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். குட்டூரில் உள்ள உண்ணாமலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோயிலில் மூலவர், நந்திக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
30-Oct-2024