உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  மழை வேண்டி வழிபாடு

 மழை வேண்டி வழிபாடு

கோபால்பட்டி: -கோபால்பட்டி அருகே கே.அய்யாபட்டி முனியப்பன் சுவாமி கோயிலில் மழை வேண்டி விவசாயிகள் கிடாய்கள் பலியிடும் ஆடிப்படையல் திருவிழா நடந்தது. நிகழ்வில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தொடர்ந்து அய்யாபட்டி, செடிபட்டி, வேம்பார்பட்டி, கோம்பைப்பட்டி சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 30 கிடாய்கள், சேவல்களையும் மழை வேண்டி முனியப்பனுக்கு காணிக்கையாக பலியிட்டு வழிபாடு நடத்தினர். மறுநாள் பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை