மேலும் செய்திகள்
சனிவார வழிபாடு
15-Aug-2026
சனிவார வழிபாடு
25-Jul-2026
கோபால்பட்டி:மழை பொழிய வேண்டி கோபால்பட்டி அருகே வி.மேட்டுப்பட்டி கதிர் நரசிங்க பெருமாள் கோயிலில் பக்தர்கள் ஆண்டாள் பாசுரம், திருப்பாவை பாடி வழிபட்டனர். முன்னதாக கதிர் நரசிங்க பெருமாளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோயில் கொடி மரத்திற்கு பூக்கள் வைத்து 27 முறை சுற்றி வந்தனர். பின்னர் கோயில் எதிரே உள்ள குளத்தில் குழுவாக ஆண்டாள் பாசுரம், திருப்பாவை பாடி சிறப்பு வழிபாடு நடத்தினர். கோயில் அறங்காவலர் ராஜசிம்மன், நிர்வாகிகள், மேட்டுப்பட்டி சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
15-Aug-2026
25-Jul-2026