உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தயாராகும் பாதுகாப்பு அறை

தயாராகும் பாதுகாப்பு அறை

திண்டுக்கல், செப்.2 அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிக்கவும், தாய், சேய் நலனை போற்றவும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம்  தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டம் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான செப்.,15ல் அதிகாரப்பூர்வமாக துவங்கி வைக்கப்பட உள்ளது. ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறந்த குழந்தைகளுக்கு இத்திட்டம் பொருந்தும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு  மருத்துவமனைகளிலும் இத்திட்டத்திற்கு தேவையான இடஒதுக்கீடு செய்து பாதுகாப்பு அறைகள் தயார் செய்யும் பணி நடக்கிறது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை இரண்டாம் தளத்தில் முதல்வர் ஸ்ரீசரவணன் அறைக்கு அருகே பாதுகாப்பு அறை தயார் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை