உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பிரதம மந்திரி கல்வி உதவி கால அவகாசம் நீட்டிப்பு

பிரதம மந்திரி கல்வி உதவி கால அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல்: இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் தேசிய கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. விண்ணப்பபிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை இருந்த நிலையில் தற்போது அக்.31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ.2.50 லட்சம். இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவர்கள் அதே இணையத்தில் புதுப்பித்துக்கொள்ளலாம். விபரங்களளை அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தினை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !