உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திட்ட அனுபவ கண்காட்சி

திட்ட அனுபவ கண்காட்சி

சின்னாளபட்டி: காந்திகிராம பல்கலையில் வேளாண்மை மாணவர்களின் கிராம தங்கல் திட்ட அனுபவ கண்காட்சி நடந்தது. துணைவேந்தர் பஞ்சநதம் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், மாணவர்கள் வகுப்பறை அறிவை, நடைமுறை அனுபவங்களுடன் இணைத்து கண்காட்சியை அமைத்துள்ளனர். இதுபோன்ற துறை சார்ந்த கற்றல், மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு கிராமப்புற மக்கள் பயன் பெறும் வகையில் சேவையாற்ற வழிவகுக்கும். மாணவர்களின் படைப்பாற்றல், புதுமை திறன், குழு தொழில் உணர்வு, எதிர்கால தொழில் முனைவு வளர்ச்சிக்கு சிறந்த அடித்தளமாக அமைந்திருக்கும் என்றார்.வேளாண்மை துறை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கண்காட்சியில், 9 மாணவர் குழுக்கள் தங்கள் கிராம தங்கல் அனுபவங்கள் குறித்த மாதிரிகள், விளக்கப் பதாகைகள், செயல்முறை விளக்கங்கள், வெளியீடுகளை அமைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !