உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  3வது நாளாக தொடரும் போராட்டம்

 3வது நாளாக தொடரும் போராட்டம்

வடமதுரை:வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்தில் 15 ஆண்டுகளாக நிரந்தரமாக சார் பதிவாளர் பணி நியமனம் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிபவர்களே மாற்று பணியாக வருகின்றனர். இதனால் பல்வேறு சிரமங்கள், சிக்கல்கள் பத்திர எழுத்தர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏற்படுகிறது. இங்குள்ள குறைகளை நீக்க கோரி ஏப்.8 முதல் உள்ளூர் எழுத்தர், ஆலோசகர்கள் தங்களது அலுவலகங்களை மூடிவிட்டு பத்திரப் பதிவு பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 3வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே ஏப்.13 முதல் அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து போராட்டம் நடத்த போலீசாரிடம் அனுமதி கோரி சங்க நிர்வாகிகள் விண்ணப்பித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை