உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  குப்பைக்கிடங்கை மாற்ற கோரி மறியல்

 குப்பைக்கிடங்கை மாற்ற கோரி மறியல்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் பழநி ரோடு முருகபவனம் குப்பைக்கிடங்கில் மாநகராட்சி குப்பை கொட்டப்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் தீ விபத்து , கழிவுகளின் துர்நாற்றத்தால் மூச்சுத்திணறல், காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்படுவதாக புகார் உள்ளது. இதன் குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி கருணாநிதி நகர், முத்துராஜ் நகர், மீனாட்சி நாயக்கன்பட்டி, முருகபவனம் பகுதி மக்கள் 3 ஆண்டாக போராடுகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட கரும்புகை குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதிப்பட்டனர். இந்நிலையில் குப்பைக்கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுடன் இணைந்து நேற்று மறியலில் ஈடுபட்டனர். மேற்கு போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை