அய்யலுாரில் மறியல்
வடமதுரை: அய்யலுார் கிணத்துப்பட்டி பிள்ளையார் கோயில் முதல் மேற்குகளம் வரை புறம்போக்கு நிலத்தை அப்பகுதி மக்கள் பாதையாக பயன்படுத்தி வந்தனர். ரோடாக மாற்றும் திட்டத்திற்கு வருவாய் துறையினர் நேற்று அளவீடு செய்ய சென்றனர். சிலர் தடுத்தனர். ரோடு கிடைக்காமல் போய்விடுமோ அதிருப்தியான அப்பகுதியினர் அய்யலுார் புத்தூர் ரோட்டில் மறியல் நடத்தினர். பேரூராட்சி தலைவர் கருப்பன், துணைத் தலைவர் செந்தில், வடமதுரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அளவீடு பணி தொடர செய்ததால் போராட்டம் முடிவுற்றது.