லேப்டாப் கேட்டு போராட்டம்
நிலக்கோட்டை: நிலக்கோட்டை அரசு பெண்கள் கல்லுாரி முதுகலை மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி வகுப்புகளை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில் 600க்கு மேற்பட்ட முதுகலை மாணவர்களுக்கும் வழங்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். வழங்கும் வரை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் கவுதம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதால் வகுப்புகளுக்கு சென்றனர். மாணவிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட தமிழக வெற்றிக்கழக ஒன்றிய செயலாளர்கள் உதயகுமார், பிரேம் குமார் உள்ளிட்ட 10க்கு மேற்பட்டோரை வத்தலக்குண்டு போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.