மக்கள் தொடர்பு முகாம்
வடமதுரை: சித்துவார்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்தது. எம்.எல்.ஏ., காந்திராஜன் முன்னிலை வகித்தார். ஆர்.டி.ஓ., சக்திவேல் வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன், பொறுப்பாளர் பாண்டி, பேரூராட்சி தலைவர் கருப்பன், நிர்வாகிகள் சொக்கலிங்கம், தினேஷ், முன்னாள் தலைவர்கள் ராஜரத்தினம், கணேசன் பங்கேற்றனர். 300 பயனாளிகளுக்கு ரூ.97.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.