மக்கள் தொடர்பு முகாம்
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. கலெக்டர் துர்கா தலைமை வகித்து 190 பயனாளிகளுக்கு ரூ.70.59 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் கோவிந்தராசு, ஆர்.டி.ஓ., பிரியங்கா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் ஹென்றிபீட்டர், பழநி மாவட்ட சுகாதார அலுவலர் அனிதா, துணை இயக்குனர் சந்திரிபிரியா, பயிற்சி துணை கலெக்டர் திவ்யலட்சுமி, தாசில்தார் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.